நிலவுக்குச் செல்வதற்கான விண்வெளி வீரர்களின் சீருடைகள் வெளியிடப்பட்டது

Mar 17, 2023 06:22 pm

நாசாவினால் திட்டமிடப்பட்ட மனிதர்கள் கொண்ட சந்திரப் பயணமான ஆர்ட்டெமிஸ் பயணத்தில் விண்வெளி வீரர்கள் அணியும் உடைகள் சமீபத்தில் டெக்சாஸின் ஹூஸ்டனில் வெளியிடப்பட்டது.

இந்த விண்வெளி உடை முதன்மையாக கருப்பு நிறத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களும் ஆடையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஆடை விண்வெளி வீரர்களின் உடல்களுக்கு மிகவும் நெகிழ்வான முறையில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பல தசாப்தங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற அப்பல்லோ பயணங்களில் விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த கனமான ஸ்பேஸ்சூட்களை விட இது ஒரு அழகான உடை என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த உடைக்கு Axiom Extravehicular Mobility Unit அல்லது AzEMU என்று பெயரிட்டுள்ளனர். இன்னும் முன்மாதிரியாக இருக்கும் இந்த விண்வெளி உடை குறித்து மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று நாசா கூறுகிறது.

இந்த  விண்வெளி உடையை உருவாக்க நாசா பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஈஸ்டர் மார்க்விஸின் உதவியை நாடியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உடையை ஹூஸ்டனை தளமாகக் கொண்ட ஆக்ஸியம் ஸ்பேஸ் தயாரித்தது, இதற்காக நாசா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு 228.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இருப்பினும், AzeEMU விண்வெளி உடையின் இறுதி வடிவத்தை நாசா தொடர்ந்து இரகசியமாக வைத்துள்ளது.

Read next: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாதுகாப்பு ஜாமீன் வழங்கிய லாகூர் நீதிமன்றம்