காப்பகங்களில் உள்ள ஆசிய இனத்தவர் கொரோனாவால் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

3 weeks

கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளையர்களையும் விட காப்பகங்களில் உள்ள ஆசிய ஆண்கள் மற்றும் பெண்களே அதிகளவில் உயிரிழப்பு அபாயத்தை எதிர்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெள்ளையர்களையும் விட காப்பகங்களில் உள்ள ஆசிய நாட்டைச் சேர்ந்த பெண்களே இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுவாக தேசிய புள்ளிவிபரவியல் நிலையம் ஒக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது.

ஆசியாவைச் சேர்ந்த ஆண்களின் இறப்பு விகிதம் வெள்ளையர்களையும் விட 1.6 மடங்கு அதிகம்.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஆண்களின் கொவிட் இறப்பு விகிதம் 1.6 ஆகவும் வெள்ளையர்களின் இறப்பு விகிதம் 1.7 ஆகவும் காணப்படுகின்றது.

 இன அடிப்படையிலான கொரோனா உயிரிழப்பு விகித்தை தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் மார்ச் 2 முதல் ஜுலை 28 வரையான காலப்பகுதியில் மதிப்பீடு செய்திருந்தது.இது 2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்புடன் இணைக்கப்படும்.

கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தக்க சுகாதார நிலைமை காரணமாக வைத்தியாலைக்கு வருகை தந்தவர்களிடத்தில் வைரஸ் ஆபத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றதா என்பதை அறிந்துக்கொள்வதற்காக ஆய்வாளர்கள் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் தரவுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில்  காப்பகங்களில் உள்ள சில இனக்குழுக்களிடையே ஆபத்து அதிகரித்துள்ளதை இவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.அத்துடன் தனியார் காப்பகங்களில் உள்ள இனக்குழுக்களிடையே காணப்படும் ஆபத்தை விடவும் இது குறைவு என தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காப்பகங்களின் புவியியல் மற்றும் ஆள் அடர்த்தியை சீர்செய்யும் போது வெள்ளையர்களுடன் ஒப்பிடும் போது அனைத்து இன மக்களுக்கும் ஆபத்து குறைக்கப்பட்டது.

கறுப்பின ஆண்களிடத்திலான அதிகரித்த ஆபத்து 1.3 வீதத்தால் குறைவடைந்துள்ளதுடன் கறுப்பின பெண்களுக்கு 1.4 வீதமும் ஆசிய ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் இது முறையே 1.4 மற்றும் 1.7 வீதமாக குறைக்கப்பட்டது.

அடிப்படை சுகாதார நிலைக்கு மேலும் சரிசெய்தலானது இரு இனக்குழுக்களுக்கும் சிறிய அளவில் ஆபத்தை குறைக்க வழியேற்பட்டது.இதன் விளைவாக கறுப்பின ஆண்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து குறைந்தது.

Read next: ஒப்பீட்டளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆசிய இனத்தவரே