10 மில்லியன் கொரோனா வைரஸ் தொற்றுக்களை கடந்த இரண்டாவது பிராந்தியமாகிறது ஆசியா

Oct 25, 2020 08:50 pm

உலகில் கொரோனா தொற்றினால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த இரணடாவது வலயமாக ஆசியா காணப்படுகின்றது.சில இடங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மந்த நிலை காணப்பட்டாலும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரிப்பு காணப்படுகின்றது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பின்னர் ஆசியா உலகில் நான்கில் ஒரு பங்கு தொற்றாளர்களை கொண்டுள்ளது.இங்கு 42.1 மில்லியன் மக்கள் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஆசியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 163000 என்பதுடன் அது உலகளாவிய ரீதியில் 14 வீதமாக காணப்படுகின்றது.

பல நாடுகளில் காணப்படும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவு அறிக்கைகளை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே காணப்படும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான அதிகரிப்பு காணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக பிராந்திய நாடுகள் கடந்த வாரங்களாக தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் முன்னேற்றமடைந்துள்ளன.

இந்தியாவில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இது முற்றிலும் முரணாக காணப்படுகின்றது.

தெற்காசியாவில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.உலகளாவிய ரீதியில் 21 வீத தொற்றையும் 12 வீத உயரிழப்புக்களையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் நாளாந்த தொற்று 57000 ஆக காணப்படுகின்றது.ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு 58 புதிய தொற்றாளர்கள் என்ற அடிப்படையில் தொற்று காணப்படுகின்றது.அதேபோன்று இங்கு நாள் ஒன்றுக்கு 764 கொவிட் மரணங்கள் இடம்பெறுகின்றன.அமெரிக்காவில் 8.5 மில்லியன் மக்களும் இந்தியாவில் 7. 8 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாளாந்த தொற்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் மீண்டும் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியர்க்ள கவலை வெளியிட்டுள்ளனர்.விடுமுறை நெருங்கி வருகின்றமை மற்றும் குளிர்காலம் விவசாயிகளினால் ஏற்படுத்தப்படும் மாசு என்பன நிலைமையை மோசமாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் அண்டைய நாடான பங்களாதேஷ் ஆசியாவில் இரண்டாவது அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு.இங்கு சுமார் நான்கு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜுலை மாதம் பதிவானதையும் விட தற்போது நாளாந்த தொற்று எண்ணக்கை குறைவடைந்துள்ளது.

பங்களாதேஷில் தொற்று குறைவடைந்து வருகின்றது.இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொற்றின் அதிகரிப்பு காணப்படுகின்றமையினால் இவற்றின் முக்கிய சந்தைகள் பாதிப்படைந்து சீனாவை கடுமையான நிலைக்கு தள்ளியள்ளது.

சீனாவுக்கு அடுத்தாக ஆடைத்தொழிலில் பங்களாதேஷே காணப்படுகின்றது.

நோயை கட்டுப்படுத்துவதில் நாடு முன்னேற்றம் கண்டாலும் முக்கிய ஆடைத்தொழிற்துறையினர் சர்வதேச சில்லறை சந்தையிக்கான விநிNயுhகத்தை தாமதப்படுத்துகின்றனர்.அல்லது விலை குறைப்பை கோருகின்றனர்.இது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் வழிவகுக்கின்றது.எனவே ஒரு மில்லியன் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்ய தூண்டப்பட்டுள்ளனர்.இவர்களின் 3ல் ஒரு பங்கினர் ஜுலை மாதம் மீள சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இதேவேளை தென்கிழக்காசிய நாடுகளில் பிலிப்பைன்ஸை; கடந்தது இந்தோனேஷியா.இங்கு கடந்த வாம் சுமார் 370000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகின் பெருமளவான முஸ்லிம் பெரும்பாண்மையை கொண்ட நாடான இந்தோனேஷியா தொற்றை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுகின்றது.அடுத்த வருடம் 20வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெறவிருப்பதால் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதில் போட்டித்தன்மையுடன் இந்தோனேஷியா காணப்படுகின்றது.தடுப்பு மருந்தின் செயற்றிறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு முன்னரே இநதோனேஷியா அவசரப்படுவதாக சில நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொவிட் 19 னை கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் முன்னெடுக்கும் நடைமுறைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பினபற்ற வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிகரமான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் கொவிட் 19 உயிரிழப்பு உலகளாவிய ரீதியில் 2 மில்லியனாக இரட்டிக்கும் என ஐக்கிய நாடுகளின் அவசரநிலை திட்ட தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

Read next: இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் குறைக்கப்படலாம்