அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்... பயிற்சியாளர் டிராவிட்டின் செம ப்ளான்

Jul 18, 2021 09:08 pm

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கோச் ராகுல் டிராவிட்டின் கணிப்பு அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜுலை 18) கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 2 ஃபாஸ்ட் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. வேகப்பந்து வீச்சில் இருவர் மட்டும் இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா 3வது பவுலராக களமிறங்கினார்.

இந்நிலையில், பிரேமதாஸா ஸ்டேடியத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவேதெரிவித்திருந்தது. இதனால், இந்திய அணி மூன்று ஸ்பின்னர்ஸ்களுடன் களமிறங்குவது என்று கோச் டிராவிட் முடிவு செய்தார்.

தவிர, தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் பிரேமதாஸா பிட்ச், ஸ்பின்னுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் கணித்திருந்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 8 ஓவர்களில் வீசினார்கள். அதில் பந்தில் எந்த இம்பேக்ட்டும் இல்லை. இதனால், 9வது ஓவரிலேயே ஸ்பின்னர்களை களமிறக்கினார் கேப்டன் தவான்.

டிராவிட் கணித்தது போலவே, இலங்கை அணி தற்போது இழந்திருக்கும் முதல் நான்கு விக்கெட்டுகள் ஸ்பின்னர்களுக்கே விழுந்துள்ளது. குல்தீப் 2 விக்கெட்டுகளை, சாஹல், க்ருனால் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். கிட்டத்தட்ட அந்த அணியின் டாப் மற்றும் மிடில் ஆர்டர் அந்த அணி 120 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே காலியாகிவிட்டது.

இலங்கை அணி வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள் என்பதால், டிராவிட் ஸ்பின் கொண்டு அவர்களை கட்டுப்படுத்த வியூகம் வகுத்திருந்தார். அதன்படி, விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது. இலங்கை அணியும் ஏகப்பட்ட ஸ்டிராடஜியுடன் களமிறங்கி இருந்தாலும், இவ்வளவு சீக்கிரத்தில் 4 விக்கெட்டுகளை இழந்துவிடுவோம் என்பதை அந்த அணி எதிர்பார்க்கவில்லை.

Read next: பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு மருந்து தொடர்பான தரவுகள்