அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்

Nov 23, 2022 04:55 am

இந்த கோயில் எங்கு உள்ளது? 

கேரளா மாநிலம்‚ ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.

 இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 

கேரளாவிலிருந்து சுமார் 162 கி.மீ தொலைவில் ஆலப்புழா அமைந்துள்ளது. ஆலப்புழாவிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 

இத்தலத்தில் அமைந்துள்ள அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க‚ அம்பாள் வெயிலில் நின்று அற்புதமாய் தரிசனம் தருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது.

இத்தலத்தில் திருவிழாவின்போது 41 நாட்களும் அம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானம் அமைந்துள்ளது. மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள்.

 வேறென்ன சிறப்பு? 

இத்தலத்தில் கணேசர்‚ முருகன்‚ கிருஷ்ணர்‚ ஆஞ்சநேயர்‚ ஐயப்பன்‚ நவகிரகம் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

இங்கு கார்த்திகை 1ஆம் தேதி முதல் மார்கழி 11ஆம் தேதி வரை 41 நாட்கள் களபாபிஷேகம் (சந்தனம்) நடைபெறுகிறது.

இக்கோயிலில் தினமும் பஞ்சாமிர்த அபிஷேகமும்‚ சிறப்பு பூஜைகளும்‚ அர்ச்சனையும் நடைபெறுகிறது.

 என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? 

சரஸ்வதி பூஜை‚ நவராத்திரி விழா ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? 

இத்தலத்தில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? 

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்

Read next: ஸ்ரீ ராமஜெயம்