இந்தக் காரணத்துக்காகவா அர்னால்டு மனைவியிடம் டிவோர்ஸ் பெற்றார்?

Dec 29, 2021 10:47 pm

Photo: Patrick Schwarzenegger

அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் தனது மனைவியிடம் இருந்து 10 வருட நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் கடைசியாக விவகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

நேற்று செவ்வாய் நீதிமன்றத்தில் பதிவாகிய ஆவணங்களில் இருந்து இது தெரியவருகிறது-இதன் மூலம் டெர்மினேட்டர் நச்ச்த்திரம் தனது ஊடகவியலாளர் மனைவியை 35 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் முடிவுக்கு கொண்டுவருகிறார். யார் எவ்வளவு பெறுகிறார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

அர்னால்டு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னெடி அவர்களின் பெறாமகளை 1986 இல் திருமணம் செய்து இருந்தார்-இதன் மூலம் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றார்கள். இருப்பினும் 2011 இல் ஆர்னோல்ட் அவர்கள் தனது வீட்டு வேலைக்காரி ஒருவரை அதற்கு 14 வருடத்துக்கு முன்னர் ஒரு குழந்தைக்கு தாயாக்கிய உண்மையை ஒத்துக்கொண்ட பின்னர் அவரின் மனைவி விவாகரத்துக்கு விண்ணம் செய்து இருந்தார்.

 

 

Read next: உலக சுற்றுலா அழகி பட்டத்தை வென்றார் இலங்கைப் பெண்