அகர முதல எழுத்தறிவுத்தோர்க்கு சிகரம் ஏற்றும் நல்லாசிரியர் விருது

Oct 02, 2022 10:18 am

அகர முதல எழுத்தறிவுத்தோர்க்கு சிகரம் ஏற்றும் நல்லாசிரியர் விருது.

திருவண்ணாமலை அக்.2 ; திருவண்ணாமலை மாவட்டம் பன்னாட்டு லயன் சங்கங்கள் 321-I அச்சிறுபாக்கம் புதிய சகாப்தம் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆசிரியர் தின விழாவில் அகர முதல எழுத்தறிவுத்தோர்க்கு சிகரம் ஏற்றும் சிறந்த நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சிறுபாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அ.ஜெயமுருகன் அவர்களுக்கு 

திருவண்ணாமலை தனியார்  திருமண மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொ.பொன்னையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் அச்சிறுபாக்கம் புதிய சகாப்தம் அரிமா சங்க சாசன தலைவர் பொறியாளர் லயன் பி.சக்திவேல், சாசன செயலாளர் லயன் ஆர்.சத்தியகுமார், பொருளாளர் வி.கவியரசன், தகவல் தொழில் நுட்ப இயக்குனர் செய்தியாளர் லயன் எஸ்.ராஜசேகர், உட்பட அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read next: தேமுதிக -வினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ; மது , போதை , பெட்ரோல் குண்டு வீச்சு இல்லாத தமிழகம் வேண்டும் .