நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு மீண்டு்ம் வெற்றி

Nov 24, 2022 02:19 pm

2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் சற்றுமுன்னர்(24) இடம்பெற்றது. குழுநிலை விவாதத்தின் இறுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார். 

இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.Read next: வட கொரிய ஜனாதிபதியின் மகள் வாழும் சொகுசு வாழ்க்கை