இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு குழந்தை- மீட்கும் பணி தீவிரம்

Jun 14, 2021 12:57 pm

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Read next: சுதந்திர தினத்துக்கு முன்பே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் – தமிழிசை