தண்ணீரில் மயக்க மருந்து.. மகனுடன் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..சிக்கிய டிக்கெட் பரிசோதகர்

Jan 23, 2023 07:43 am

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் ஓடும் ரயிலில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் பெண்ணொருவர் தனது 2வயது மகனுடன் ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்கினார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் டிசி ராஜு சிங், AC coach-ல் அமர வைப்பதாக கூறி அழைத்துள்ளார்.அவர் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால் குறித்த பெண்ணும் அவருடன் சென்றுள்ளார். அங்கு ராஜு சிங் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்த அப்பெண் சிறிது நேரத்தில் மயக்கமானார்.

உடனே அவருடன் தூங்கிக் கொண்டிருந்த மகனை வேறு படுக்கைக்கு மாற்றிவிட்டு, ராஜு சிங் அவரது நண்பருடன் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.மறுநாள் தனது வீட்டிற்கு சென்ற குறித்த பெண், தனக்கு நேர்ந்த கொடூரத்தை கணவரிடம் கூறியுள்ளார். உடனடியாக காவல்நிலையம் சென்ற இருவரும் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

Water

அதனைத் தொடர்ந்து ராஜு சிங் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் வன்புணர்வின் ஈடுபட்ட இன்னொரு நபர் யார் என்று குறித்த பெண்ணால் அடையாளம் காட்ட முடியவில்லை.இதனால் அந்த நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஓடும் ரயிலில் பெண்ணொருவர் டிக்கெட் பரிசோதகராலேயே வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Read next: நான்கரை இலட்சத்திற்கு ஏலம் விடப்படவுள்ள 1917ம் ஆண்டு இலங்கை நாணயத்தாள்!