யாழில் பிறந்து 11 மாதங்களேயான குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Nov 30, 2022 04:11 am

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.

சளி காரணமாக இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை முட்டு இழுத்ததன் காரணமாக பெற்றோரால் காரைநகர் வலந்தலை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் குழந்தை உயிரிழந்துள்ளது.

மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


Read next: இரயில் நிலையத்தில் நடை மேடையின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல்