ஜோன்சன் அண்ட் ஜோன்சனுக்கு முக்கியத்துவம்; அஸ்ட்ராஸெனெக்கா வெளியேற்றப்பட்டது

1 week

அஸ்ட்ராஸெனெக்கா மற்றும் ஜான்சன் அண்ட் ஜோன்சன் ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவங்கள் ஒரே மருந்தாலையில் தமது தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்து இருந்தன; இருப்பினும் தொழிலார்கள் இரண்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களை கலந்ததால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரித்த 15 மில்லியன் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக  ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவிக்கையில் தமது நிறுவனம் எமெர்ஜெண்ட் பயோசொலுஷன்ஸ் (Emergent BioSolutions) ஆலையின்  கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தாம் அரசுடன் ஒப்பந்தம் செய்தது போல் மே மாதத்துக்கு முன்னர் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஸெனெக்கா இது தொடர்பாக தெரிவிக்கையில் தமது நிறுவனம் ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைத்து செயல்பட்டு தமது மருந்தை தயாரிக்க வேறுவழியை அடையாளம் காணும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும் அதன் மருந்தை தயாரிக்க ஏற்பட்ட தடங்கள் அமெரிக்காவில் அதன் மருந்தை தயாரிப்பதில்  அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட மற்றுமொரு தடங்கல் ஆகும்.

அமெரிக்காவில் அஸ்ட்ராஸெனெக்காவுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை, இருப்பினும் அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த மருந்து அமெரிக்காவுக்கு தேவைப்படாமல் போகலாம் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பட்டு நிறுவன மருத்துவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 மில்லின் அஸ்ட்ராஸெனெக்கா தடுப்பு மருந்துகளை கடனாக கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழங்கி உள்ளது.

Read next: ஐவர் பாதிப்பு! ஒருவர் உயிரிழப்பு - அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை நிறுத்தியது நெதர்லாந்து