அமேஸன் காட்டின் தாவரங்கள் ,விலங்குகள் பேராபத்தின் விளிம்பில்

Jul 14, 2021 06:59 pm

அமேஸன் காட்டில் உள்ள சுமார் 10000 தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவின் ஆபத்தில் உள்ளன.

இவற்றில் 35 வீதமானவை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன.

உலக நாடுகளில் உள்ள 200 ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் மிக்பெரிய மழைக்காடான அமேஸனில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய உலக காலநிலை மாற்றத்தில் பாரியளவான பங்கை இந்தக் காடு கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்குள் காடழிப்பை பூஜ்ஜியமாக்கும் கட்டாயத்தில் உலகம் உள்ளது.அழிக்கப்பட்ட பகுதிகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேஸனில் உள்ள மண் மற்றும் தாவரங்கள் 200 பில்லியன் காபனைக் கொண்டுள்ளதுடன் முழு உலகின் வருடாந்த காபன் வெளியேற்றத்தின் ஐந்து இங்கு காபன் வெளியேற்றப்படுகின்றது.

மேலும் மனிதர்களின் செயற்பாடுகளால் 8000 சுதேச தாவரங்களும் 2300 ற்கும் மேற்படட விலங்குகளும் அதிகூடிய ஆபத்தில் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலநிலை மாற்றம் ,உயிர்பல்வகைமையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உள்ளிட்ட பல மீளமுடியா பேரழிவுகளை மனிதர்கள் எதிர்கொள்வதாக பிரசீலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேர்சீடீஸ் பஸ்டமன்டே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மிக மோசமான விடயங்களை சமாளிக்க மிகக்குறுகிய சந்தர்ப்பமே உள்ளதாகவும் அமேஸன் காட்டுப்பிரச்சனை சர்வதேச நெருக்கடிகளின் முக்கிய பிரச்சனை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமேஸன் காட்டின் உண்மையான நில விஸ்தீரணம் விவசாயம் மற்றும் சட்டவிரோத மரக்கடத்தல் என்பவற்றினால் காடழிக்கப்பட்டு 18 வீதம் சுருங்கியுள்ளது.

இதேவேளை அமேசான் மழைக்காடு தொடர்பான வரலாறு குறித்த ஆய்வில்  அங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அப்பகுதிக்கு எந்த வித சேதங்களையோ அங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு எந்த வித இழப்பையோ ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக பீபீசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read next: திரையில் 43 ஆண்டுகளை கடந்த புரட்சித்தமிழன் சத்யராஜ்... கொண்டாடும் திரையுலகம்