பெரும்பாலும் அனைத்து இங்கிலாந்து மக்களும் கடுமையான வைரஸ் விதிமுறைகளை எதிர்கொள்ளக்கூடும்.

1 month

இங்கிலாந்தின் பல பகுதிகள் தேசிய முடக்க நிலை அடுத்த வாரம் நிறைவுக்கு வரும் நிலையில் இரண்டாம் கட்ட கடுமையான கொவிட் விதிமுறைகளுக்கு கட்டுப்படக்கூடும்.

டிசம்பர் 2ம் திகதி முதல் 55 மில்லியன் மக்கள் தொடர்ந்தும் ஒன்றுகூடுவது தடை செய்யப்படும்.

பெரும்பகுதிகளான மிட்லேண்ட் வட கிழக்கு மற்றும் வட மேற்கு மென்ஞ்சஸ்ட்டர் கென்ட் உள்ளிட்ட பகுதிகள் 3ம் நிலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

ஆனால் லண்டன் மற்றும் லிவர்பூல் போன்ற பகுதிகளில் இரண்டாம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐஸில் ஒப் வெய் கோர்ன்வோல் மற்றும் ஐஸில் ஒப் சில்லி போன்ற பகுதிகளில் கடந்த வாரத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டது.

பேர்மிங்ஹம் லீட்ஸ் ஷெபீல்ட் டீஸ் வெல்லே ஒன்றிணைக்கப்பட்ட பகுதி மற்றும் வடகிழக்கு ஒன்றிணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட 21 உள்ளுர அதிகாரசபைகளைச் சேர்ந்த சுமார் 23 மில்லியன் மக்கள் மூன்றாம் நிலை கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள்.

லென்கெஷயர் லெய்செஸ்ட்டர் லின்கொன்ஷயர் ஸ்லோ பிரிஸ்ட்டல் கென்ட் மற்றும் மெட்வே ஆகுpயனவும் 3ம் நிலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

ஜிம்கள் மற்றும் சிகையலங்காரம் போன்ற அழகுகலை நிலையங்கள் மூன்று நிலை கட்டுபபாடுகளுக்கும் பொருந்தும்.இந்த நிலையில்               மூன்று நிலைகளும் அமுலில் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து தொழில்புரிதல் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்பட வேண்டும் என வழிகாட்டுதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் நிலையில் உள்ள மதுபானசாலைகள் கணிசமான உணவுகளை பரிமாறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 3ம் நிலையில் உள்ள மதுபானசாலைகளால் விநியோகம் மற்றும் டேக் ஏவே மாத்திரம் செய்ய முடியும்.

Read next: 40-60 வயதுடையவரா நீங்கள்? உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களா? இதை அறிந்திருத்தல் அவசியம்-புதிய ஆய்வு முடிவுகள்