பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
நடிகர் அக்சய் குமார், ராம்சேது என்கிற படத்தில் நடித்துவருகிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்க இருக்கிறார்கள்.
சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அக்சய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read next: மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் ஆராதனை!