ஹீரோவும் நானே வில்லனும் நானே அடுத்த அதிரி புதிரி வெற்றிக்கு தயாராகும் அஜித்

Feb 28, 2022 12:05 pm

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, புகழ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சக்கைப் போடு போட்டு வருகிறது வலிமை. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து மொழிகளில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக காணப்படுகிறது.

அதிகமான பைக் காட்சிகள், அம்மா சென்டிமெண்ட் தூக்கல் என கலவையான விமர்சனங்கள் படத்திற்கு எழுந்துள்ள போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான 3 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் க்ளப்பில் படம் இணைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேர்கொண்ட பார்வை படத்தின்மூலம் இணைந்த அஜித் -போனிகபூர் மற்றும் வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்த நிலையில் தற்போது ஏகே 61 படத்திற்காக மூன்றாவது முறையாக இணையவுள்ளது. படத்தின் பூஜை மார்ச் மாதத்தில் போடப்படவுள்ளது.

வலிமை படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் ஏகே 61 படத்தை விரைவாக முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் அஜித் கெட்டப் குறித்த ஐடியாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில் நீண்ட தாடியுடன் கூலர்சுடன் அஜித் காணப்பட்டார். நிழல்படமாக அந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அவருக்கு நெகட்டிவ் வேடம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என்ற இரண்டு கெட்டப்பிலும் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாலி, வரலாறு மற்றும் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அஜித் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்கள் அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பையே பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ஏகே61 படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தில் அவருக்கு யார் ஜோடி சேரவுள்ளனர் என்பது குறித்தும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்தும் எப்போது அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே படத்தில் அதிதி ராவ் ஹைதாரி ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read next: அப்பா ஓகே சொல்வாரா ஏக்கத்தில் துல்கர் சல்மான் எதுக்காக தெரியுமா?