அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய அரச ஊழியர்களின் பாலியல் வீடியோக்கள்

3 weeks

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்  அரச ஊழியர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடும் வீடியோக்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஒரு வீடியோவில் பெண் பாராளுமன்ற உறுப்பினரின் மேசையில் ஒரு உதவியாளர் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகி உள்ளது.

இதனை வெட்ககரமானது என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். தமது ஊழியர்களின் பாலியல் குற்றசாட்டுகளை கையாள்வது தொடர்பில் பிரதமர் மீது அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த வீடியோக்கள் கசிந்துள்ளன.

முன்னாள் அரச ஊழியர்களால் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு இந்த வீடியோக்கள் கசியவிடப்பட்டுள்ளன. 

இந்த ஊழியர்கள் பாராளுமன்ற கட்டடத்திற்குள் விலைமாதுகளை அழைத்து வந்து பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்த்து அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் லிபரல் கட்சியின் மூன்று முன்னாள் பணியாளர்கள் தாம் தமது சகாக்களால் பாலியல் தாக்குதலுக்கு முகம்கொடுத்ததாக குற்றம்சாட்டியது அண்மைய வாரங்களில் அந்தக் கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

Read next: மண்வெட்டும் இயந்திரத்திர குடை சாய்ந்து ஒருவர் பலி