ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு பின்பு... நியூசிலாந்தின் புதிய பிரதமர் யாரென வெளியாகியுள்ள அறிவிப்பு

Jan 21, 2023 09:58 am

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய பிரதமர் யார் என அறிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பொறுப்பில் இருந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தாம் இனி அரசியல் களத்தில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், 44 வயது கிறிஸ் ஹிப்கின்ஸ் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஜெசிந்தா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பில் இருக்கும் ஹிப்கின்ஸ் மட்டுமே பிரதமர் பொறுப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தொழில் கட்சி சார்பாக அவர் முன்மொழியப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக அவரை தெரிவு செய்ததாக அறிவித்துள்ளனர்.

ஜெசிந்தா

ஜெசிந்தா ஆர்டெர்ன் எதிர்வரும் பிப்ரவரி மாதம் தமது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். ஐந்தரை ஆண்டுகளாக பிரதமர் பொறுப்பில் இருந்த ஆர்டெர்ன் திடீரென்று பதவி விலகியது மொத்த நியூசிலாந்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.தற்போது ஹிப்கின்ஸ் பிரதமராக தெரிவு செய்யப்பட்டாலும், இன்னும் 8 மாதங்களில் பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்பட இருக்கிறது. இதுவரையான கருத்துக்கணிப்புகளில் தொழில் கட்சி லேசாக பின் தங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் தான் ஹிப்கின்ஸ் நியூசிலாந்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இருப்பினும், உலக அளவில் அறியப்பட்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் நிழலில் ஒதுங்கும் நிலை தான் இருந்தது.ஜெசிந்தா ஆர்டெர்ன் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த ஹிப்கின்ஸ், நியூசிலாந்தின் நம்பிக்கைக்குரிய பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் இருந்துள்ளார். நமக்குத் தேவையான நேரத்தில் நமக்குத் தேவையான தலைவராக அவர் செயல்பட்டார் என ஹிப்கின்ஸ் புகழ்ந்துள்ளார்.

Read next: புர்கினோ பசோவில் போராளிகளால் கடத்தப்பட் குழந்தைகள் உள்ளிட்ட பெண்கள் மீட்பு!