ரசிகர்களின் இதயத்தை அதிர வைத்த அதிருதா பாடல்... சூர்யா -கௌதம் மேனனின் 4வது சிங்கிள் ரிலீஸ்

Jul 20, 2021 09:26 pm


மணிரத்னத்தின் முயற்சியில் திரையுலக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நவரசா ஆந்தாலஜி உருவாகியுள்ளது. 9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் 9 படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. வரும் 6ம் தேதி நெட்பிளிக்சில் நவரசா ரிலீசாக உள்ளது. தற்போது இதன் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் சூர்யா மற்றும் கௌதம் மேனன் இணைந்துள்ள படம் கிடார் கம்பி மேலே நின்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரயாகா மார்ட்டின். சூர்யா -கௌதம் மேனன் காம்போ எப்போதுமே சிறப்பாக அமையும். அதேபோல இந்த படமும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது.

இதன் மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் இசையில் மதன் கார்க்கி வரிகளில் அந்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்நிலையில் தற்போது அதிருதா என்ற நான்காவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மெலடி நம்பர்களாக அமைந்துள்ளன.

இந்த படத்தில் சூர்யாவை இளமையான தோற்றத்தில் காண முடிகிறது. ஒன்பது ரசங்களை மையமாக கொண்டு நவரசா உருவாகியுள்ள நிலையில் தனக்கு மிகவும் பரிட்சயமான காதலை கையில் எடுத்துள்ளார் கௌதம் மேனன். அடுத்தடுத்த இந்த படத்தின் பாடல்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Read next: பிரித்தானியா: ஒரு வாரத்தில் 60.6 விகிதம் உயர்ந்த கோவிட் இறப்புகள்; இன்று மட்டும் 96 பேர் பலி