மீண்டும் இயக்குனர் ஆகும் நடிகர் சிம்பு.

Sep 13, 2022 12:00 pm

 நடிகர் சிம்பு  வல்லவனுக்கு பிறகு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வெந்துதணிந்தது காடு திரைப்படம் வருகின்ற 15 ம் தேதி வெளியாக உள்ளது. எ.ஆர்  ரகுமான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

தற்போது பத்து தல திரைப்படத்தில் சிம்பு நடித்துவரும் நிலையில் 

அடுத்ததாக சிம்பு இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மன்மதன் படத்திற்கு கதை , திரைக்கதை எழுந்திருந்த சிம்பு வல்லவன் படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அனைத்து வகையான விமர்சனத்தையும் பெற்ற   வல்லவன் திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு  மிகவும் பிடித்த படமாக இருந்து வருகிறது. 

குறிப்பாக யுவன் இசையில் வல்லவன் திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

வருகின்ற அக்டோபர் 16 ம் தேதி வந்தால் வல்லவன்  திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகல் ஆகிவிடும்.

இந்த நிலையில் மீண்டும்  திரைப்படம் ஒன்றை  இயக்க உள்ள சிம்பு கதை ஒன்றை எழுதியுள்ளாராம் . கூடிய விரைவில் இதுகுறித்த அதிகார்பூர அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Read next: வரும் 16 ம் தேதி 5941 மாணவர்களுக்கு முதற்கட்டமாக இலவச காலை சிற்றுண்டி திட்டம்.