யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு

Jan 25, 2023 12:09 am



யாழ். சுன்னாகம் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு  சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ணவால், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் முரண்பாட்டின் காரணமாகவே இன்றைய தினம் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரிய வந்துள்ளது

 எனினும் பட்டப்பகலில் பொதுமக்கள் பார்த்திருக்க இந்த சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே உடனடியாக தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதோடு கொடுத்த தாக்குதல் சம்பந்தமான பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்

Read next: பிரித்தானியாவில் சொர்க்கத்துக்கு தகவல் அனுப்பலாம் - குவியும் கடிதங்கள்