யாழில் கோர விபத்தில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

Aug 08, 2022 05:24 pm

யாழ்ப்பாணம் தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் இந்த விபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரி நகர் பகுதியில் இருந்து நுணாவில் நோக்கி ஏ – 9 வீதி ஊடாக சைக்கிளில்பயணித்த இளைஞர்களை அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியுள்ளது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மறவன்புலவு பகுதியைச் சேர்ந்த 26 வயதான க. நிசாந்தன் என்பவர் விபத்தில் சிக்கிப் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான தி.பார்த்தீபன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read next: உக்ரேனிய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்பும் பெண்கள்