யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வர வர்த்தகரும் இளம் பெண்ணும் எடுத்த தவறான முடிவு

Mar 14, 2023 05:35 pm

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையின் கோடீஸ்வர் உரிமையாளரும் , அந்த கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உட்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புப்புக்கான காரணம் தெரிய வரும். 

22 வயதான பெண் உயிரிழந்த ஒரு மணி நேரத்தில் குறித்த கோடீஸ்வர வர்த்தகரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதாக என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்த இந்த பெண் இன்றைய தினம் பணிக்குச் செல்வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Read next: எல் சால்வடாரைச் சேர்ந்த கொடிய குடும்பல் உறுப்பினருக்கு 1310 ஆண்டுகள் சிறை தண்டனை