கோட்டாபயவுக்காக தியாகம் செய்ய தயாராகும் பெண்!

Sep 03, 2022 10:42 am

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வர விரும்பினால், அவருக்காக இந்த தியாகத்தை செய்ய தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது வேறு எவருமோ இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், இதுவரை கட்சியில் அப்படியொரு கதை நடந்துள்ளது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அவர் பாராளுமன்றத்துக்கு வரும் பேச்சு சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட பொய்யாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read next: முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் ; விஷம் கொடுத்த மாணவியின் தாய்.