அமெரிக்கர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலா?

Mar 18, 2023 05:54 pm

அமெரிக்கா அல்லது மேற்குலக நாடுகள் மீது ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும்  ஐ.எஸ்.கே.பி எனப்படும் பயங்கரவாத அமைப்பு இன்னும் 6 மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயங்கரவாத தாக்குதல் முன்னறிவிப்புடனோ  அல்லது எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் அதிரடியாகவோ நடத்தப்படலாம் என அமெரிக்காவின் மத்திய இராணுவப்படை ஜெனரல் மைக்கேல் குரில்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுமாத்திரமன்றி சொந்த நாட்டைவிட வெளிநாடுகளில் வாழும்  ஆயிரக்கணக்கான அமெரிக்கக் குடிமக்கள் மீதே தாக்குதல் நடாத்தப்படுவதற்கான  சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Read next: துனிசியாவின் புதிய உள்துறை அமைச்சராக கமல் ஃபெக்கி நியமனம்