பிரான்சில் நடந்த இரட்டை கொலை - இலங்கையர் ஒருவர் கைது

Jan 24, 2023 11:20 pm

பிரான்சில் ஆகஸ்ட் 10, 2021 அன்று,  51 வயது பெண் மற்றும் அவரது 21 வயது மகள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, வெர்சாய்ஸ் நீதித்துறை காவல்துறையின் புலனாய்வாளர்கள் இந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினரைக் கைது செய்தனர் என்று பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.

27 வதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர், பாரிஸில் இருந்து வடமேற்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில், சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபருக்கும் பொலிஸார் வைத்துள்ள மரபணு சான்றுகளுக்கும் (DNA) தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், சந்தேகநபர் அதனை மறுத்துள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read next: யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு