இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

Oct 03, 2022 01:16 pm

இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மாறாமல் உள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 369 ரூபாய் 91 சதமாக உள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Read next: மகளை சிறையில் தள்ள துணிந்த விளாடிமிர் புடின்: வெளியான பின்னணி