வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். தமிழர் ஒருவரின் விபரீத முடிவு

Nov 24, 2022 09:00 am

வியட்நாம்மில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த அனைவரும் அங்குள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன்.

எனினும், இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read next: குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை