இலங்கையில் சிறையில் உள்ள காதலனை பார்க்க சென்ற காதலி செய்த அதிர்ச்சி செயல்

Dec 12, 2022 01:27 am

தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவி பல்லேகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேகநபரின் சகோதரியினால் போதைப்பொருள் அடங்கிய குறித்த பொதியை விளக்கமறியலில் உள்ள தனது சகோதரனிடம் ஒப்படைக்குமாறு கைது செய்யப்பட்ட குறித்த மாணவியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது பொதியில் இருந்த காற்சட்டையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு சிறிய பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட மாணவிக்கு போதைப்பொருள் அடங்கிய பொதியை வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: பிரான்ஸில் மீள ஆரம்பிக்கப்பட்ட 2 அணுமின் நிலையங்கள்!