பிரான்ஸில் 80,600 யூரோ கடிகாரத்தை திருடியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Jan 25, 2023 01:21 am

பிரான்ஸில் ஆடம்பரக் கடிகாரம் ஒன்றை திருடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸ் Avenue des Champs-Élysées வீதியில் உள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் மேற்படி ‘திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் திருடர்கள் மகிழுந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், திருடர்களை சில மணிநேரங்களிலேயே கைது செய்தனர். 

Poissy நகரில் வசிக்கும் இருவரையும் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து கைக்கடிகாரத்தையும் மீட்டுள்ளனர்.

Bvlgari நிறுவனத்தைச் சேர்ந்த குறித்த கைக்கடிகாரத்தின் விலை 80,600 யூரோக்களாகும் என குறிப்பிடப்படுகின்றது.

கைதான இருவரும் 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தப்பிச்சென்ற வாகனத்தை வைத்தே அவர்களை பின் தொடர்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read next: சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளர்களாகிய நூற்று கணக்கான மக்கள்!