பதவிக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத ரிஷி - உலக மக்களுக்கு கற்பித்த மிகப்பெரிய பாடம்

Oct 27, 2022 02:24 pm

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறிய நிலை புதிய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக் கொண்ட ரிஷி சுனக்கின் செயல் உலக அரசியலில் ஒரு புதிய படிப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தங்கள் பதவிக்காக மதங்களையும் தங்கள் செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும் மக்கள் மத்தியில் ரிஷி சுன் ஒரு முன்மாதிரியான செயலில் ஈடுபட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக், தீபாவளியன்று தேர்வாகியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

Budget

இந்த நிலையில், இந்து முறைப்படி வாழ்ந்துவரும் ரிஷி சுனக், இறுதி வரை தனது கொள்கையை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாமல் தனது நிலையில் இருந்தே செயற்பட்டு வருகின்றார்.

அதாவது, கிறிஸ்துவத்தை பாதுகாக்கும் ஒரு பெரிய நாட்டில், இந்து மதத்தை பின்பற்றும் முதல் பிரதமர், ரிஷி சுனக் காணப்படுகின்றார். அரசியலுக்காக தனது மதத்தை மாற்றிக் கொள்ளாமல் அதே நிலையில் தன்னை வைத்துக் கொண்டுள்ளார். 

Diwali

பதவி மற்றும் நாட்டின் நிலைக்கு ஏற்ப எந்த சந்தர்ப்பத்தில் மாற்றிக் கொள்ளாத ரஷி சுனக் அதற்குரிய கௌரவத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார்.

அவர் 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்றுக்கொள்ளும்போதே, கையில் பகவத் கீதை உடன் பதவி பிராமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.   

அதுமட்டுமின்றி, பிரித்தானியாவின் முதல் பிரதமாரான சர் ஹோரேஸ் வால்போலின் அலுவலகம் இருந்த  Downing Street பகுதியில்தான் அரசின் உயர் பதவியில் இருப்போரின் குடியிருப்புகள் உள்ளன. அப்படி, டவுனிங் வீதி 11ஆம் எண் குடியிருப்பில் வசித்து வந்தவர்களில், முதல் முறையாக தீபாவளியை கொண்டாடியவரும் ரிஷி சுனக் தான் என்பது சிறப்பம்சமாகும்.

அவர் தனது குடியிருப்பின் வாசலில் தீபாவளியை கொண்டாடிய தருணத்தை குறித்து பேசும்போது,டவுனிங் வீதியில் தீபாவளியை கொண்டாடியது என்பது எனது பெருமைமிகு நிகழ்வுகளில் ஒன்று. அந்த இரண்டு ஆண்டுகளில் அந்த பதவியை வகித்துக்கொண்டிருந்தபோது, நிகழ்ந்த பெருமையான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று என அவர் கூறியிருந்தார்.

Leftists

அவர் பிரித்தானியாவில் பிறந்திருந்தாலும், ஒக்ஸ்போர்ட், ஸ்டான்போர்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயின்றிருந்தாலும், எப்போதும் அவரது கலாச்சார விடயங்களை விட்டு அவர் விலகியிருந்ததில்லை.

அதாவது, மாட்டிறைச்சி உண்ணாதது, அவரது பணி மேசையில் விநாயகர் சிலைகளை வைத்துக்கொள்வது போன்றவை அதற்கு உதாரணங்களாக அமைகின்றது. அத்துடன் அவர் மது அருந்தும் நபர்களுடன் இருந்த போதிலும் குடிப்பதற்கும் பழக்கம் கொண்டவர் அல்ல எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இந்து மதத்தின் கையில் அணியும் கயிறுகளை உட்பட அவர் பதவியேற்கும் போது அகற்றவில்லை.

ஒருமுறை ஊடகத்தில் ரிஷி சுனக் பேசும்போது,“இந்து என்பதில் நான் பெருமைக்கொள்கிறேன். இந்துவாக இருப்பது எனது அடையாளம். எனது நம்பிக்கை எனக்கு பலத்தை கொடுக்கிறது, ஒரு பயனையும் தருகிறது. நான் யார் என்பதில் அதுவும் ஒரு பகுதியாகும்” என கூறினார்.

New

இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் தங்கள் மதத்தில் இருந்து விலகி பௌத்த மதத்திற்கு மதம் மாறுகின்றனர்.

இவ்வாறானவர்கள் மத்தியில் ரஷி சுனக் என்பவர் மிகப்பெரிய ஒரு முன் உதாரணமாகியுள்ளார்.

ஒருவர் தனது தகுதியை வளர்த்துக்கொள்வதாம் மூலமே லட்சியத்தை அடையமுடியும்-தனது அடையாளத்தை மாற்றுவதன் மூலம் அல்ல என்பதை இவரது வாழ்க்கை எமக்கு எடுத்துக்காட்டுகிறது.

Rishi


Read next: இலங்கையில் திடீரென நிறம் மாறி குழப்பத்தை ஏற்படுத்திய கடல்