பிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளாடையுடன் சென்ற நபரால் வெடித்தது சர்ச்சை

Nov 11, 2020 11:23 am

பிரான்ஸில் Plougastel, Finistère என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளாடையுடன் சென்ற நபரால் சர்ச்சை எழுந்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆடைகள் விற்பனை நிலையங்கள் அத்தியாவசியமற்ற பொருள் என அறிவிக்கப்பட்டு, அந்த விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,  Plougastel, Finistère நகரில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று Leclerc எனும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளார். 

தனியே உள்ளாடை மாத்திரமே அணிந்து சென்ற அவர், கைகளில் ஆடை, காற்று வாழ்வதற்கு அத்தியாவசியம் என எழுதப்பட்ட பதாகை ஒன்றை வைத்திர்ருந்தார். 

இச்சம்பவம் புகைப்படமாக பதிவாகியுள்ளது. 

அவருடைய இந்த புகைக்கப்படம் சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் ஆடைகளையும் சேர்த்துக்கொண்டதற்காக இந்த எதிர்ப்பு பதிவாகியுள்ளது. 

Read next: உடல் ஊனமுற்ற நிலையிலும் அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை இளைஞன்!