பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக எண்ணிய நபர்; பின்னர் கண்ட அதிர்ச்சியளிக்கும் காட்சி!

Mar 17, 2023 01:29 pm

அவுஸ்திரேலியாவில் கடற்கரைக்குச் சென்றிருந்த ஒருவர், இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துகொண்டிருப்பதைக் கண்டு, அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணியுள்ளார்.

Cody Green என்பவர் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Binningup கடற்கரை என்னும் கடற்கரைக்கு காலாற நடப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைந்திருப்பதைக் கண்டுள்ளார் அவர். அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணி, அவற்றை தன் மொபைலில் படம் பிடிக்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், பிறகுதான் அந்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கிறது.

அவை இனச்சேர்க்கையில் ஈடுபடவில்லை. அவற்றில் ஒன்று Dugite என்னும் வகையைச் சேர்ந்த கொடிய நச்சுப் பாம்பு. இந்த பாம்புகள் cannibal என்னும் தன் இனத்தையே கொன்று தின்னும் கொடூர குணம் கொண்டவை.

இந்த பாம்புகள் மற்ற விலங்குகளைக் கொத்தி செயலிழக்கச் செய்தும் உடலை இறுக்கியும் கொன்றபிறகு அவற்றை அப்படியே முழுமையாக விழுங்கிவிடுமாம். தன் அளவுள்ள பாம்புகளைக்கூட அவை விழுங்கிவிடுமாம்.அந்த கொடிய பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கிக்கொண்டிருக்கும் அரிய காட்சியைத்தான் Cody கண்டிருக்கிறார், படமும் பிடித்திருக்கிறார். 

Read next: போருக்கு மத்தியில் ரஷ்யா புறப்பட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்