மட்டக்களப்பைச் சேர்ந்தவர் மலேசியாவில் கொலை

3 weeks

 மட்டக்களப்பு – செங்கலடியைச் சேர்ந்த 37 வயதுடைய கணபதிபிள்ளை விவேகானந்தன், மலேசியாவில் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மலேசியா – ஜோஹூர் பிரதேசத்தில் பணியாற்றிய மேற்படி நபர் மீது, கடந்த 3ஆம் திகதி  சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டதால்  இவர் உயிரிழந்திருப்பதாக, பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


Read next: எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவுக்காக அரசாங்கம் 5 சதமேனும் செலவிடாது