நடுவானில் பற்றியெரிந்த பிரான்ஸ் விமானம்!!

Sep 18, 2021 04:22 pm

சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த எயார்பிரான்ஸ் விமானத்தில், நடுவானில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்தச் சத்தத்தை தொடர்ந்து விமானத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது. துரிதமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த வெடிவிபத்து விமானத்தின் வால்பகுதியில் ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read next: நேற்று 2.5கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஒரு கட்சிக்கு காய்ச்சல் அடிக்கிறது: பிரதமர்!