பிப் பள்ளி சார்பில் சுகன்யாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

Sep 21, 2022 09:20 am

கோவை இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை  மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள்  கடந்த 7-ம் தேதி, இரவு  வெளியிடப்பட்டது.

அதில் 720 மதிப்பெண்களுக்கு, 702 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் இரண்டாவது இடத்தை, கோவை காளப்பட்டி சுகுணா பிப் பள்ளியில் படித்த மாணவி ஹரிணி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வில்,

முதலிடம் பிடித்த பெண் மாணவி என்ற பெருமையையும் பள்ளிக்கு சேர்த்துள்ளார்.

கோயம்புத்தூர் காளப்பட்டியில் உள்ள சுகுணா பிப் பள்ளி மாணவி ஹரிணி மாநில அளவில் நீட் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தார்.

இவரை பாராட்டும் விதமாக சுகுணா பிப் பள்ளி சார்பில்  பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

சுகுணா பிப் பள்ளியின் முதல்வர் பூவண்னண் வரவேற்றார். சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார். 

சுகுணா கல்வி குழுமங்களின் தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி  பேசுகையில்,  தமிழக அளவில் நீட் தேர்வில் மாணவிகள் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.   இவர் மருத்துவராகி, இந்தியாவில் சேவை புரியவேண்டும் என்றார். மாணவி ஹரிணி பேசுகையில், 

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் அது குறித்த பயத்தை விட வேண்டும். அடுத்த கட்டமாக, டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் படிக்க விரும்புகின்றேன் என்றார்.

Read next: இலங்கையை விட்டு வெளியேறிய 300 அரச ஊழியர்கள்!