பிள்ளைகளுக்காக தன் இரண்டு கால்களையும் இழந்த தந்தை

Jan 25, 2023 08:08 am

 பனிச்சறுக்கு பயிற்சியின் போது ஆபத்தில் சிக்கிய தமது பிள்ளைகள் இருவரை காப்பாற்ற போராடிய தந்தை ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றிலேயே சிறுமிகள் இஸ்லா மற்றும் அன்னாவுக்கு பனிச்சறுக்கு பயிற்சி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.சம்பவத்தின் போது சிறுமிகள் இருவரும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வழியில், சாலையில் குவிந்துள்ள பனியை நீக்கும் வாகனம் ஒன்று சிறுமிகள் இருவரையும் நோக்கி விரைந்து வருவது தந்தையான Dave Miln பார்வையில் பட்டுள்ளது.

உடனடியாக முடிவெடுத்த Dave Miln, உயிரை துச்சமாக மதித்து அந்த வாகனத்தின் முன்பு பாய்ந்துள்ளார். இதில் படுகாயமடைந்த Dave Miln-ன் இரண்டு கால்களும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

சொந்த

மட்டுமின்றி, இரண்டு தொடை எலும்புகள், அவரது இடுப்பு, கீழ் முதுகெலும்புகள், மற்றும் மூன்று விலா எலும்புகள் ஆகியவை உடைந்துள்ளது. இந்த விபத்தில் 1 வயதான அன்னா காயங்கள் ஏதுமின்றி தப்பியிருந்தார். ஆனால் 3 வயது இஸ்லா இரண்டு கால்களும் உடைந்து, தற்போது சிகிச்சையில் உள்ளார்.

விபத்துக்கு பின்னர் Dave Miln அவுஸ்திரேலியா திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Read next: கொலம்பியாவில் குப்பைத் தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரபலமான பெண்: வெளியான பகீர் பின்னணி