சுவிற்சர்லாந்தில் தவறுதலாக கிளிக் செய்ததால் 6,700 பிராங்குகளை இழந்த தந்தை!

Jan 22, 2023 12:27 pm

சுவிட்சர்லாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல முற்பட்ட தந்தை ஒருவர் தவறுதாலக இரத்து செய்யும் குறியீட்டை அழுத்தியதால் 6700 சுவிஸ் பிராங்குகளை இழந்துள்ளார். 

கடந்த ஜுலை மாதம் சுவிட்சர்லாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல முற்பட்ட ஒருவர் நான்கு பேருக்கான டிக்கட்டுக்களை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பயணம் தடைபட்டது. 

இதனால் குறித்த முன்பதிவினை வேறு ஒரு தினத்திற்கு மாற்றுவதற்கு பதிலாக இரத்து செய்யும் குறியீட்டினை அழுத்தியுள்ளார். இதனால் அவர் 6700 பிராங்குகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜுலை மாதத்தில் தானியங்கி மின்னஞ்சல் மூலமாக 223 சி.எச்.எஃப் திருப்பித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து வாடிக்கையாளர் சேவையை தொடர்புக் கொண்டு வினவியபோது, மூன்று வாரங்களாக அவர் பதிலளிக்கவில்லை எனவும், பணத்தை திரும்பப்பெறுவது அல்லது மறுபதிவு செய்வது சாத்தியமில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம் இரத்து செய்யும்போது அவர் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களையும் சமமாக நடத்தும் நலன்களுக்காக விதிவிலக்குகள் மாற்றம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Read next: கர்ப்பமான பிறகு கணவனைப் குறித்து தெரியவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை! தெரியாமல் நடந்த திருமணம்