அரிசி ஆலையில் போலி மதுபான தொழிற்சாலை

Feb 06, 2023 08:26 am

செங்கல்பட்டு மாவட்டம் 

மதுராந்தகம் அடுத்த 

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வடமணிப்பக்கம் கிராமத்தைச் சார்ந்தவர் திமுக பிரமுகர் வடிவேலு

இவர் அச்சிறுப்பாக்கம் 

திமுக பிரமுகரும் தொழிலதிபருக்கு

சொந்தமான கொங்கரைமாம்பட்டில்

உள்ள அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுராந்தகம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்று இரவு  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது 

அரிசி ஆலையிலிருந்து இருந்து 

35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 

போலி மதுபானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருளான எரி சாராயம் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 212 கேன்கள்,  

5040 போலி மதுபான பாட்டில்கள் 

மதுபானங்கள் தயாரிக்க பயன்படும் ஸ்டிக்கர், மூடி, உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் போலி மதுபானங்களை தயாரித்து அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம்சுற்று பகுதியில் விற்பனை செய்த வடிவேலு 

மற்றும் முருகன் என்பவரை

மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Read next: ஐ.எம்.எஃபின கடனை பெற்றுக்கொள்ள சீனா வழங்கிய உத்தரவாதங்கள் போதுமானது அல்ல - அலி சப்ரி