இன்னல்கள் குறையும் நாள் பார்க்கலாமா ராசிபலனை

Sep 01, 2022 06:36 am

இன்றைய (01-09-2022) ராசி பலன்கள்

மேஷம்

வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : முன்னேற்றமான நாள்.

பரணி : ஆதரவு உண்டாகும். 

கிருத்திகை : சாதகமான நாள்.


ரிஷபம்

உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். பழைய சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும். 

ரோகிணி : புரிதல் உண்டாகும். 

மிருகசீரிஷம் : குழப்பம் நீங்கும். 


மிதுனம்

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அறக்கட்டளை சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அனுபவமான பேச்சுக்களின் மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும். 

திருவாதிரை : சிந்தித்து செயல்படவும். 

புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.


கடகம்

வியாபார பணிகளில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். விவசாய பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஆதரவு மேம்படும். 

பூசம் : தேடல் அதிகரிக்கும்.

ஆயில்யம் : அமைதியின்மையான நாள்.


சிம்மம்

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு புதிய யுக்திகளின் மூலம் தீர்வு காண்பீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : மதிப்பு அதிகரிக்கும்.

பூரம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திரம் : முயற்சிகள் கைகூடும். 


கன்னி

எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : காலதாமதம் உண்டாகும்.


துலாம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். நண்பர்களின் செயல்பாட்டில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். இன்னல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : கவனத்துடன் செயல்படவும். 

சுவாதி : குழப்பம் நீங்கும்.

விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.


விருச்சிகம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஒருவிதமான கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

அனுஷம் : ஒத்துழைப்பு உண்டாகும். 

கேட்டை : கட்டுப்பாடுகள் குறையும். 


தனுசு

எதிர்பார்த்த சில தனவரவின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் புதுவிதமான சிந்தனையின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். போட்டிகளில் உள்ள எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.

பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திராடம் : புதுமையான நாள்.


மகரம்

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திராடம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

திருவோணம் : புரிதல் உண்டாகும். 

அவிட்டம் : சுறுசுறுப்பான நாள்.


கும்பம்

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொண்டு வெற்றி கொள்வீர்கள். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும். 

சதயம் : ஆதரவான நாள்.

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.


மீனம்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : காலதாமதமான நாள். 

உத்திரட்டாதி : கனிவுடன் செயல்படவும். 

ரேவதி : மாற்றமான நாள்.

Read next: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி.