பெருவில் மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்பு!

Mar 17, 2023 10:27 am

பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவர் தனது குழந்தையுடன் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் சேறும் சகதியும் அடித்து வரப்பட்டதில் குழந்தையை காப்பாற்ற முடியாமல் காஸ்டிலோ திணறிய போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர், சேற்றில் இருந்து இழுத்து குழந்தையை காப்பாற்றினார்.

இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read next: டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பயணம்