68 வயது நபரை காதலிக்கும் 24 வயது இளம்பெண்

May 14, 2022 05:30 am

காதல் பற்றியது எப்படி? மனம் திறந்த ஜோடி

24 வயது மதிக்கத்தக்க   கொன்னி காட்டன்  என்ற இளம் பெண், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தன்னார்வ தொண்டின் போது, 68 வயது மதிக்கத்தக்க ஹெர்ப் டைகர்சன் என்பவரை சந்தித்துள்ளார்.

அதன் பின் இருவரும் தொடர்ந்து ஒரு நல்ல நண்பர்களாக பேசி வந்தனர். அதைத் தொடர்ந்து எங்கு சென்றாலும், இருவரும் ஒன்றாக வெளியில் செல்வதை வாடிக்கையாக கொண்டனர்.       

இந்நிலையில், இந்த ஜோடி தங்களுடைய கடந்த ஆண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி, நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. ஆனால்,

கொன்னி காட்டன் அவரை பணத்திற்காக மட்டுமே காதல் செய்கிறார் என சமூகதள வாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

இது குறித்து கொன்னி காட்டன் கூறுகையில், 

நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம் என்றவுடன் பலரும் அதிர்ச்சியடைந்தனர். நான் அவரை காதலித்த பின்பு,

எனக்கு கிடைக்கும் பொதுவான கருத்து என்னவென்றால், நான் அவருடைய பணத்திற்காக இருக்கிறேன்.

அதுமட்டுமின்றி அவர் என்னுடைய உடலுக்காக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அப்படி இல்லை. என் குடும்பமும் ஆரம்பத்தில் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் அவர்களும் காலப்போக்கில் எங்களை ஏற்றுக் கொண்டனர். ஏனெனில், அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார், சந்தோஷப்படுத்துகிறார் என்பதை அவர்கள் பார்த்து தெரிந்து கொண்டனர்.

இந்த ஜோடி இருவரும் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதைப் பற்றி இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டே போதே,

இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

இவர்களின் காதல் குறித்து, ஹெர்ப் டைகர்சன்  கூறுகையில், முதலில் எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவர் என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்பது அசாதாரணமானது.

அவள் பணத்திற்காக தன்னுடன் ஊர் சுற்றுவதாக கூறப்பட்டது. இந்த கொரோனா காலகட்டம் இருவரையும் சரியாக புரிந்து கொள்ள உதவியது,

குடும்பத்தினரும் புரிந்து கொண்டனர்.

நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், எனவே இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவும் அவர்களுக்கும் இருந்தது. இருப்பினும்,

நான் அவருடன் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புகிறேன் என புன்னகையுடன் கூறியுள்ளார்.

Read next: ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசை பிரிட்டன் ஊ​க்குவிக்கும்