தேர்தலை தள்ளிப்போடும் அழைப்பிலிந்து பின்வாங்கிய டிரம்ப்

1 week

அமெரிக்க அதிபர் தேர்தலை பிற்போடவேண்டும் என்று ட்விட்டரில் அழைப்பு விடுத்து சில மணிநேரத்தில் தான் தேர்தலை பிற்போட விரும்பவில்லை என்று செய்தியார் சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று 30ஆம் திகதி டிரம்ப் அவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கும் முறையில் (mail-in voting) தனக்கு கரிசனைகள் இருப்பதாகவும், ஆனால் வராதவர்களுக்காக (absentee) போடப்படும் வாக்குகளில் தனக்கு எந்த கவலைகளும் இல்லை என்றும், அதன் காரணமாக தேர்தலை பிற்போட வேண்டும் என்றும் ட்வீட் செய்து இருந்தார்.

டிரம்பின் இந்த கருத்தை அறிந்தவுடன் காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் உள்ள  இரு தரப்பினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளிப்போடும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது. மேலும் கடந்த 200 ஆண்டுகளில் முன்பு ஒருபோதும் ஜனாதிபதி தேர்தல் எந்தக் காரணத்துக்காகவும் இது வரை பிற்போடப்படவில்லை.

ட்விட்டரில் அவ்வாறு தெரிவித்த டிரம்ப் பின்னர் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் அதை மீண்டும் கோரவில்லை, ஆனால் தபால் மூலம் போடப்படும் வாக்குகள் தொடர்பில் தனது சந்தேகங்களை வெளிப்படுத்தி இவ்வாறு தேர்தலில் மோசடிகள் செய்யப்பட்டால் வரலாற்றில் இதுவே மோசமான தேர்தலாக இருக்கும் என்றுஅவர் தெரிவித்தார்.

அவர் இவ்வாறு தெரிவித்து இருந்தாலும் அவர் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலை திசை திருப்பவே இவ்வாறு டிரம்ப் ட்விட் செய்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்

 

Read next: கிளிநொச்சி இயக்கச்சியில் தனிமை படுத்தப்பட்ட 166 பேர் வீடு சென்றனர்