தமிழகத்தில் நாளை பிளஸ் 1 தேர்வு முடிவு

1 week

தமிழகத்தில் நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும். தமிழகத்தில் 8.32 லட்சம் மாணவர்கள் எழுதிய பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான மறு தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் www.tn results.nic.in www.tn.nic.in மற்றும் www.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர்களுடைய பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து முடிவுகளை மதிப்பெண்களுடன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. செல்போன் எண்ணிற்கும் தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த செல்போனில் இருக்கும் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்ப தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நால்வர் கைது