இந்தியாவில் ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு

1 week

கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆக.31 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட ஊரடங்கு காலம், இன்றோடு நிறைவடைய  உள்ளதால், மூன்றாவது கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் கட்ட ஊரடங்கை மத்திய அரசு  மார்ச் 25ல் அறிவித்தது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை முழு ஊரடங்கு தொடரும். கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் கிடையாது.   நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு மொத்தமாக நீக்கப்படுகிறது. யோகா மற்றும் பயிற்சிக் கூடங்கள் வரும் ஆக. 5ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிகள் மற்றும், கல்லூரிகள் ஆக.31 வரை திறக்க அனுமதி  இல்லை. திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மெட்ரோ ரயில்கள் இயங்காது.  விளையாட்டு போட்டிகள், பெரிய கூட்டங்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான சேவைகள் தொடரும். மற்ற சேவைகள் படிப்படியாகத் தொடங்கப்படும்.

ரயில் சேவை இல்லை. மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.

Read next: ஐக்கிய இராஜ்ஜியத்தில் தனிமைப்படுத்தும் நாட்கள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.