ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைத்தார் கேரி லாம்

1 week

ஹாங்காங்கில் கிருமிப்பரவல் மோசமடைந்து வருவதால், தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) பின்னொரு நாளுக்கு சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளார்.

அந்நாட்டு சட்டமன்றத் தேர்தல்  செப்டம்பர் 6ஆம் தேதி இடம்பெறவிருந்தது.

எனினும் தேர்தலை தள்ளிப்போடும் முடிவு அந்த நகரின் ஜனநாயக ஆர்வலர்களுக்கு  பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாவும் திருவாட்டி லாம் குறிப்பிட்டார்.

ஹாங்காங்கில் சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்வதில் COVID-19 நோய்ப்பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக முன்னதாகச் சீனா கூறியது.

சட்டமன்றத் தேர்தல் உள்நாட்டு விவகாரம் என்றும் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Read next: சமூக இடைவெளியால் இன்புளுவன்ஸா நோய்த்தொற்று குறைவடைந்துள்ளது: ஆய்வு முடிவுகள்