போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கழுகு மீட்கப்பட்டது.

1 week

பிரதிநித்துவ புகைப்படம் 

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தி கழுகு நேற்யை தினம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கழுகும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீகொடை நாவலமுல்ல கனத்த வீதியில் கூடு ஒன்று அமைத்து குறித்த கழுகு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கழுகு கடல்மார்க்கமாக போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்காக பயிற்றப்பட்டுள்ளது.

இந்த கழுகு சுமார் 12 கிலோ போதைப்பொருட்களை கொண்டுசெல்லக்கூடியது என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read next: இந்தியாவில் ஒரே நாளில் எப்பொழுதும் ஏற்படாத அளவில் 55,078 புதிய தொற்றுகள்