ஜேர்மனின் செயற்பாட்டுக்கு சீனா கண்டிப்பு! பதிலடி உறுதி என எச்சரிக்கை

1 week

ஹொங்ஹொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஜேர்மனி தற்காலிகமாக நிறுத்தியதை சீன தூதரகம் கண்டித்துள்ளது.

இந்த நிலையில் ஜேர்மனியில் உள்ள சீன தூதரகம் வெளியட்ட அறிக்கையில்,

ஹொங்ஹொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஜேர்மனி நிறுத்தி வைப்பது சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளையும் மீறியதாகவும் மற்றும் சீனாவின் உள் விவகாரங்களில் முற்றிலும் தலையிடுகிறது என்றும் கூறியது.

ஜேர்மனி அமைச்சரின் கருத்துக்களுக்கு தூதரகம் கடும் அதிருப்தியையும் உறுதியான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதுடன், இதற்கு பதிலடி கொடுக்க சீனாவுக்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹொங்ஹொங் தலைவர் கேரி லாம் செப்டம்பர் 6 ஆம் திகதி நடக்கவிருந்த நகரின் சட்டமன்றத்திற்கான தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைத்தார்.

இதனையடுத்து, ஹொங்ஹொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஜேர்மனி நிறுத்தி வைப்பதாக ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்தார்.

தேர்தலுக்காக 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது மற்றும் சட்டமன்றத்திற்கான தேர்தல்களை ஒத்திவைக்கும் முடிவு ஹொங்ஹொங் குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரான மற்றொரு மீறலாகும் என்று மாஸ் கூறினார்.

அடிப்படை சட்டத்தின் கீழ் உரிமைகளை உறுதி செய்வதோடு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான உரிமையும் அடங்கும் என்று மாஸ் கூறினார்.

Read next: கொரோனா வைரஸ் பேரழிவானது எதிர்காலத்திலும் நீடிக்கும்: உலக சுகாதார அமைப்பு