சீனாவும் அமெரிக்காவும் பனிப்போரை நோக்கி செல்கின்றனவா? ஒரு செய்தியின் பின்னணி

1 week

சீன மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றம் மேலும் உக்கிரநிலையை அடைந்து வருகின்றது.4 தசாப்தங்களுக்கு முன்னர் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டதனைத் தொடர்ந்து மீண்டும் இவ்வாறான பதற்றம்  அதிகரித்துள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம் தான் ஹூஸ்டனில்  உள்ள சீன துணை தூதர்  அலுவலகத்தை சீனா மூட வேண்டும்  என்ற  அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவு. அதற்க்கு எதிராக சண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவர்க்கு சீனா உத்தரவு இட்டது. இது இத்துடன் முடியும் என்று எதிர்ப்பாக முடியாது.

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் தொடர்பில் தொடர்ச்சியாக போற்றும் வகையில் கருத்து தெரிவித்து வந்தாலும்  பாதுகாப்பு வர்த்தகம் தொழிநுட்பம் மனித உரிமைகள் மற்றும் ஏனைய பிரிவுகள் ஒருவரோ அல்லது மாற்றுவரோ பழிவாங்கல் போன்றன அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் காலத்தில் அதிகரித்திருந்த நிலையே காணப்படுகின்றது.

முதலில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று சீனாவால் திட்டமிட்டே பரப்பியதாக அமெரிக்க அதிபர் மற்றும் அவரோடு அதிகாரத்தில் இருப்பவர்களும் குற்றம் சாட்டி வந்தனர். அந்த வைரஸை பரவியதை முடிந்த அளவில் வுஹான் வைரஸ், சைனா வைரஸ் மற்றும் குங் பு வைரஸ் என்று இன துவசம் ஏற்படுத்தும் வகையிலேயே அவர் அழைத்து வந்தார்.

தொற்று பரவல் குறித்த சீனாவின் பொறுப்பற்ற செயல்பாடு என்று அழைத்து உலக சுகாதார அமைப்புக்கு  தொடர்ந்து நிதியளிப்பதை அவர் நிறுத்தியதுடன்,உலக சுகாதார நிதியத்துடனான உறவையும் அமெரிக்க முறித்துக்கொண்டது.

அமெரிக்காவின் வைரஸ் தடுப்பு மருந்து   ஆராய்ச்சி தகவல்களை சீன இணைய ஊடுவிகள் திருட முற்பட்டதாக  நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் சரமாரியான குற்றச்சாட்க்களை; நிராகரித்த சீனா கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியதற்கு அமெரிக்க அதிபர் அதை கையாண்ட விதமே என்று விமர்சித்தது.

அமெரிக்காவின் ஆதாரமற்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்க துருப்பினர்கள் வுஹானுக்கு வருகை தந்ததாகவும் அவர்களே வைரஸ் பரவலுக்கு பொறுப்பென்றும் சீன தரப்பு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ட்ரம்ப் பதவியேற்றார்.சீனா தனது நாட்டின் வர்த்தக உறவை தவறாக பயன்படுத்துவதாகவும்  கொள்வனவுகளையும் விட விற்பனைகளே அதிகரித்திருந்ததாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

சீன பொருட்கள் மீது தண்டனை அளிக்கும் வகையில் பல வரிகளை ட்ரம்ப் விதித்தித்தார்.இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்ட வர்த்தக மோதலுக்கு சீனா தனது பங்கிற்கு எதிர் நடவடிக்கையை மேற்கொண்டது.

ட்ரம்ப் நிர்வாகம் முதல் கட்ட வர்த்தகம் என தெரிவித்து பல வரிகளை தளர்த்துவதற்கு இணக்கப்பாடு ஒன்று ஜனவரி மாதம் ஏற்பட்டாலும் வரியில் இதுவரை குறைப்பு செய்யப்படவில்லை.

தென்சீனக் கடல் முடக்கம்

இறையாண்மை குறித்த சீனாவின் கூற்றுக்கள் மற்றும் தென்சீன கடற்பரப்பில் சீனாவின் அதிகபட்ச கட்டுப்பாடு மற்றும் கடற்பரப்பில் பெருமளவான கப்பல் போக்குவரத்து என்பன தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான சவால்களாக அமைந்தன.சீனா மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் தென் சீனக்கடலில் உரிமை கொண்டாடுவது முற்றுமுழுதாக சட்டவிரோதமானது என்றும் பசுபிக் பகுதியில் சீன மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்குதல் போன்றனதொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தொழிநுட்பங்களை களவாடியதாக அமெரிக்காவினால் சீனா மீது நீண்ட காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. சீனாவின் மிகப்பெரிய தொழிநுட்ப நிறுவனமான ஹுவாவே  சர்வதேச தடைப்பட்டியலில் இணைப்பது மற்றும் ஏனைய நாடுகளின் தொழிநுட்ப வசதிகளில் சீனா ராஜதந்திர ரீதியில் செயற்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பிரதம அதிகாரி மெங் வென்ஸோ 2018 டிசம்பரிலிருந்து கனாடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மோசடி குற்றச்சாட்டில் இவர் தடுத்து வைகப்பட்டதுடன்,அமெரிககாவிடம் ஒப்படைக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமது அதிவலுகொண்ட வயர்லெஸ் வலையமைப்பிலிருந்து தவிர்ந்துக்கொள்வதாகவும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவதாகவும் பிரித்தானியா கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய ஊடக பணியாளர்களை வெளியேற்றியமை

சீனாவுக்கு ஆதரவாக பிரசாரங்களை  சீன தேசிய தொலைக்காட்சி சேவை தூண்டுவதாக குற்றஞ்சாட்டிய ட்ர்ம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் சீன குடியிருமை கொண்ட சீனச் செய்தியளார்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் கட்டளையையும் மேற்கொண்டார்.

இதற்கு பதிலடி வழங்கும் வகையில் தமது நாட்டில் உள்ள நியூயோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஆகியவற்றின் ஊழியர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டதுடன்,சீனாவில் அமெரிக்க பத்திரிகையாளர்களின் சுதந்திரமான அணுகுமுறையையும் சீனா மட்டுப்படுத்தியது.

டிரம்ப் தான் தேர்தலில் பைடன் இடம் தோற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக சீனாவை சீண்டுவதாகவும் தனது அரசியல் லாபங்களுக்காக டிரம்ப் சீனாவை பழிகேடாக பயன்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டுகிறது. ஆனால் அமெரிக்காவோ சீனா கொரோனா வைரஸ் தொற்று பரவும் நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல தான்தோன்றித் தனமாக நடவடிக்கையில் ஈடுபட்டுளளதாகவும் குற்றம் சாட்டுகிறது.

இந்த கடுமையான மோதல் போக்கு டிரம்ப் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வரை மட்டுமே தொடரும் என்று கூற முடியாது. அமெரிக்கா பல வருடங்களாக மத்திய கிழக்கு பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்டு வந்த காரணமாக சீனா மீது அதன் பார்வை விலகிக்கொண்டது. அந்த காலப்பகுதியில் சீனா தனது இராணுவ மற்றும் பொருளாதார சக்தியை பெருவாரியாக வளர்த்து கொண்டது. இந்த காரணமாக சீனா தன்னை அமெரிக்காவுக்கு இணையான நாடக பார்க்க ஆரம்பித்து விட்டது.. அதன் கரமாகவே அது அமரிக்காவுக்கு இணையான பதிலடியை கொடுக்க முனைகிறது. ஆனால் சீனாவை அமெரிக்கா ஒரு சம பங்காளியாக ஏற்றுக்கொள்ளாது. இதனால் டிரம்ப் வரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் முன்பு இருந்தது போல்  திரும்புவது கடினம்.   இதன் காரணமாக புதிய பனிப்போர் ஆரம்பித்து பல காலத்துக்கு தொடரும் என்பதில் ஐயம் இல்லை.  

Read next: பிரேசில் அதிபரின் மனைவியையும் விட்டுவைக்காத கொரோனா!