பிரேசில் அதிபரின் மனைவியையும் விட்டுவைக்காத கொரோனா!

1 week

Photo: Jair Messias Bolsonaro

பிரேசிலின் அதிபர் ஜேர் போல்சனாரோ மனைவி மிச்செல் போல்சனாராவுக்கும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மற்றொரு மூத்த அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மருத்துவர் குழு நேற்று அறிவித்தது.

ஏற்கெனவே பிரேசில் அதிபர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறிய நிலையில் தற்போது அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேசிலின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மார்கோஸ் பாண்ட்ஸ்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில்,

ப்ளூ காய்ச்சல் அறிகுறியும், தலைவலியும் இருப்பதால் நான் கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்எனத் தெரிவித்துள்ளார்.

Read next: அமெரிக்காவில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு